என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சேலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்9 Jun 2018 10:16 AM GMT (Updated: 9 Jun 2018 10:16 AM GMT)
சேலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் கூலி தொழிலாளி.
இவரது மகள் பவித்ரா வயது (17). இவர் கணவாய்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் பிரியாவை கல்லூரிக்கு போகவேண்டாம் என பெற்றோர் கூறியதாக தெரிகிறது. மேலும் அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் பவித்ரா இருந்தார்.
நேற்று தனியாக இருந்த பவித்ரா வீட்டில் உடல் கருகிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×