search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை விட்டு விலகியதால் கள்ளக்காதலியின் கணவரை கொன்றேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    என்னை விட்டு விலகியதால் கள்ளக்காதலியின் கணவரை கொன்றேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்

    என்னை விட்டு விலகியதால் கள்ளக்காதலியின் கணவரை கொன்றேன் சேலம் டிரைவர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம்

    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடியை சேர்ந்தவர் பெருமாள். இவர் கோவையில் செப்டிங் டேங்க் வண்டியின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முருகேஸ்வரி, குழந்தைகளுடன் சீரகாப்பாடிக்கு வந்து விட்டார். சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள டெய்லரிங்கடையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு, பரமகுடியை சேர்ந்த அருள் என்கிற அருள்செல்வம் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் பெருமாளின் உறவினர்கள் சமாதானம் செய்து பெருமாளையும், முருகேஸ்வரியையும் சேர்த்து வைத்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி பெருமாள் திடீரென மாயமானார். பின்னர், அவர் இறந்த நிலையில் உடல் வீரபாண்டி ஏரியில் இருந்து மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பெருமாளை கொலை செய்து விட்டதாக கூறி, கடந்த வாரம் அருள்செல்வம் பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். நேற்று முன்தினம் முதல் அவரை ஆட்டையாம்பட்டி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், அருள் செல்வம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கார்மென்ட்ஸ் கடையில் வேலை செய்தபோது முருகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை பார்த்தவுடனே, அவரது அழகில் நான் மயங்கினேன். அவரை, எப்படியாவது எனது வலையில் வீழ்த்தி விட வேண்டும் என எண்ணினேன். இது முருகேஸ்வரிக்கு தெரியாது. தவறான கண்ணோட்டத்தில் பழகுவது குற்றம் என தெரிந்தும் பழகினேன்.

    முருகேஸ்வரி தனது குடும்பம் வி‌ஷயம் குறித்தும், கணவரை பற்றியும் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். ஒரு நாள் அவர், தனியாக கார்மென்ட்ஸ் கடை தொடங்கப்போகிறேன். இதற்கு தேவையான உதவிகளை செய்ய முடியுமா? என கேட்டார். ஏற்கனவே, அவரது அழகில் மயங்கிய நான், அவர் உதவிகேட்டவுடன் மறுக்கவில்லை. உதவிகள் செய்து கொடுத்தேன்.

    ஊரில் உள்ளவர்களுக்கு எங்களது தொடர்பு பற்றி தெரிய தொடங்கியது. அவர்கள் முருகேஸ்வரிக்கு அறிவுரை கூறினார்கள். அருள்செல்வத்தை நம்பாதே உன்னை ஏமாற்றுகிறான் என்றனர். என் மீது ஒரு கட்டத்தில் முருகேஸ்வரிக்கும் சந்தேகம் ஏற்பட்டது. நான் ஏமாற்றுவதாக அறிந்தார். இதனால் என்னிடம் இருந்து விலக தொடங்கினார். இருந்தாலும் நான் அவரை விடவில்லை.

    இந்த நிலையில் திடீரென பெருமாளுடன் சேர்ந்து கொண்ட அவர், என்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பழி வாங்கவே பெருமாளை எனது வீட்டிற்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    சென்னையில் இருந்து வந்த எனது நண்பர் உசிலம்பட்டி பால் பாண்டியுடன் சேர்ந்து பெருமாளின் உடலை வீரபாண்டி ஏரியில் கல்லை கட்டி வீசினோம். பின்னர் நாங்கள் இருவரும் தலைமறைவாகி விட்டடோம். ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்ததை அறிந்ததும் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக தெரிகிறது.

    கொலைக்கு துணையாக இருந்த உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×