என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே ஆம்னி பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
Byமாலை மலர்22 May 2018 3:59 PM GMT (Updated: 22 May 2018 3:59 PM GMT)
வேலூர் அருகே ஆம்னி பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார். ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா உச்சிமலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 37), லாரி டிரைவர். இவர், டீசல் நிரப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரியை ஓட்டி சென்றார். வேலூர் அப்துல்லாபுரம் மேல்மொணவூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, லாரிக்கு பின்னால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று வந்தது.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர், மேல்மொணவூர் அருகே சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராமு, தான் ஓட்டி வந்த லாரியை அவர் மீது மோதாமல் இருக்க, லாரியை மெதுவாக இயக்கியதாக தெரிகிறது. அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ், திடீரென லாரியின் மீது மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆம்னி பஸ், சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது மோதி, பின்னர் சாலையின் தடுப்பில் ஏறி ஓடி சிறிது தூரத்தில் போய் நின்றது. அதில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்த விபத்தில் லாரிக்குள் சிக்கிய ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். சைக்கிளில் வந்து சாலையை கடக்க முயன்றவர் காயம் அடைந்து சாலையில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ராமுவின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ராமுவுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

Next Story
×