என் மலர்

  செய்திகள்

  கடைசி நேர தேர்வுக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது- மதுரை மாணவர்கள் பேட்டி
  X

  கடைசி நேர தேர்வுக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது- மதுரை மாணவர்கள் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் கடைசி நேர தேர்வுக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை மாணவர்கள் கூறியுள்ளனர்.#NeetExam #Student

  பரணிதரன் (மதுரை பீ.பி. குளம்):-

  நீட் தேர்வு எழுதுவ தற்காக கேரளா மாநிலம், எர்ணா குளத்திற்கு செல் கிறேன். எனது நண்பர் களுக்கு மதுரையிலே யே தேர்வு மையம் அமைந் துள்ளது. ஆனால் எனக்கு மட்டும் கேரளாவில் தேர்வு எழுத மையம் ஒதுக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுடன் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் அவர்கள் தேர்வு எழுதி விட்டு வாருங்கள், அரசு உதவித்தொகை கிடைக்கும் என தெரிவித்தனர்.

  வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப் பட்டதால் கடைசி நேர தேர்வுக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

  கவுதம் (மதுரை தெற்கு வாசல்):-

  நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப் பட்டுள்ளது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு எனக்கு யாருமே தெரியாது.

  மாணவர்களின் கஷ்டத்தை போக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

  இப்போது தேர்வு எழுத எனது தந்தையை அழைத்துச் செல்வதால் அவரது வேலையும் பாதிக் கப்பட்டுள்ளது என்றார்.#NeetExam #Student

  Next Story
  ×