என் மலர்

  செய்திகள்

  பெரியகுளம் அருகே விவசாயியை தாக்கிய தந்தை-மகன்
  X

  பெரியகுளம் அருகே விவசாயியை தாக்கிய தந்தை-மகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியகுளம் அருகே விவசாயியை தாக்கிய தந்தை-மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  தேனி:

  பெரியகுளத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 53). இவருக்கு பெரியகுளம் அருகே உள்ள வேளாண்குளம் பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு தற்போது வாழை கன்றுகளை நடவு செய்துள்ளார்.

  சம்பவத்தன்று தெய்வேந்திரன் தோட்டத்துக்கு சென்ற போது 3 பேர் தோட்டத்தில் இருந்த வாழைக்கன்றுகளை சேதப்படுத்திக் கொண்டு இருந்தனர். இதை கண்ட தெய்வேந்திரன் அவர்களை தட்டிக் கேட்டார்.

  இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தெய்வேந்திரனை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த தெய்வேந்திரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி தெய்வேந்திரனை தாக்கியது வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மகன் விவேக் மற்றும் ஒருவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×