என் மலர்

  செய்திகள்

  காவிரி விவகாரம் - திருச்சியில் வருகிற 8-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்
  X

  காவிரி விவகாரம் - திருச்சியில் வருகிற 8-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சியில் வருகிற 8-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
  திருச்சி:

  தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் குருசாமி, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநில தலைவர் விசுவநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை இறுதிப்பட செயல்படுத்த இயலாத ஒரு சூழ்நிலையை இன்றைக்கு அறிவித்துள்ள முடிவின்படி வெளிப்படையாக தெரிகிறது. இந் திய அரசியலமைப்பு சட்டத்தில் பாராளுமன்றம் பெரிதா? சட்டமன்றம் பெரிதா? இல்லை நீதித்துறை பெரிதா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறபோது, இரண்டு அங்கங்களையும் நீதித்துறைதான் சரிப்படுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறது.

  ஆனால், நீதித்துறையே பாராளுமன்றத்திற்கும், நிர்வாகத்துறைக்கும் பின் போகின்றது என்பதை தலைமை நீதிபதியின் தலைமையில் இருக்கிற சுப்ரீம் கோர்ட்டு நிரூபித்து காட்டி உள்ளது. கீழமை பாசன உரிமை என்பது சர்வதேச சட்டத்தின்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள நதிநீர் பங்கீட்டு சட்டப்படியும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

  காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும், கர்நாடக அரசும் பறிப்பதை இந்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் போக்கை மக்களுக்கும் எடுத்து சொல்லும் வகையில் வருகிற 8-ந்தேதி திருச்சியில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மக்கள் அமைப்பு சார்ந்த ஒரு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

  Next Story
  ×