என் மலர்

  செய்திகள்

  போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு
  X

  போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #HighCourt

  சென்னை:

  மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவர் மாங்காடு போலீசில் கடந்த 2006ம்ஆண்டு நவம்பர் 13-ந் தேதி புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 2 நாட்களுக்கு பின்னர் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

  ஜாமீனில் வெளிவந்த ஜீவானந்தம் செங்கல்பட்டு கோர்ட்டில் மாங்காடு போலீசாரும் எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பொய்யான புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீஸ் நிலையத்தில் வைத்து தன்னை கடுமையாக தாக்கியதாகவும், எனவே, சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி. போலீஸ்காரர்கள் சிவா, பிரகாசம், தண்டலம் மோகன், முருகன், விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாஜிஸ்தி ரேட்டு, சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். போலீசார் அனைவரும் நேரில் ஆஜரானார்கள். ஆனால், வழக்கை தொடர்ந்தவர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீலும் ஆஜராகவில்லை. இதையடுத்து அந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கடந்த 2008ம் ஆண்டு தள்ளுபடி செய்தார்.

  இந்த தீர்ப்பை எதிர்த்து ஜீவானந்தம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

  இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும், மனுதாரர் அவரது சார்பில் வக்கீல் என்று யாரும் ஆஜராகவில்லை.

  போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘மனுதாரர் வேண்டுமென்றே இப்படி வழக்கை தொடர்ந்து விட்டு, விசாரணைக்கு வராமல் இழுத்தடித்து வருகிறார். இதனால், போலீசாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்’ என்று வாதிட்டார்.

  இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

  மனுதாரர் தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு செலவையும் ஏற்படுத்தியுள்ளார்.

  எனவே, பாலாஜி உள்ளிட்ட 6 பேருக்கும் ஜீவானந்தம் தலா ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு தர வேண்டும். நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை ஐகோர்ட்டு சமரச மையத்திற்கு 2 வாரங்களுக்குள் வழங்கவேண்டும்.

  அபதாரத் தொகை மற்றும் நஷ்டஈடு தொகையை கட்டத் தவறினால் ஜீவானந்தத்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்து, அவரை 6 மாதங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

  Next Story
  ×