என் மலர்

  செய்திகள்

  பலியான கோபி
  X
  பலியான கோபி

  பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தே.மு.தி.க. பிரமுகர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தே.மு.தி.க. பிரமுகர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  பெரியபாளையம்:

  பெரியபாளையம் அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 36) விவசாயி. கும்மிடிப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. பொருளாளராக இருந்தார்.

  இவர் மோட்டார் சைக்கிளில் ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் பக்கத்து வீட்டை சேர்ந்த நண்பர் ரவி (54)யை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தார்.

  பெரியபாளையத்தை அடுத்த பேட்டைமேடு கிராமம் அருகே சாலை வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருந்த கால்வாய் சுவரில் மோதியது.

  இதில் பலத்த காயம் அடைந்த கோபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

  அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பெரிய பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பலியான கோபிக்கு சங்கீதா என்ற மனைவியும், சாரதி, சபரி என்ற மகன்களும் உள்ளனர்.
  Next Story
  ×