என் மலர்

  செய்திகள்

  தலித் பெண் கோவிலுக்குள் நுழைய தடை - நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
  X

  தலித் பெண் கோவிலுக்குள் நுழைய தடை - நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுச்சேரியில் கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் பெண்ணை தடுத்த குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
  புதுச்சேரி:

  விடுதலை சிறுத்தை கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  புதுவை கூனிச்சம்பட்டை சேர்ந்த ராதா என்ற தலித் சமூகத்தை சேர்ந்த பெண் கூனிச்சம்பட்டு திரவுபதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, கூனிச்சம்பட்டு ஊர் தெருவை சேர்ந்த சாதி இந்துக்கள் அவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர்.

  தலித் பெண்ணை கோவிலுக்குள் நுழைவதை தடுத்த கூனிச்சம்பட்டு சாதி இந்துக்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கூனிச்சம்பட்டு காலனி மக்களும், கூனிச்சம்பட்டு ஊர்மக்களும் சாதி பாகுபாடு இல்லாமல் வாழ்வது உண்மையாக இருந்தால் புதுவை கவர்னர் கிரண்பேடியும், மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. டி.பி. ஆர். செல்வமும், வருவாய்துறை அதிகாரிகள், ஊடகங்கள் முன்னிலையில் கூனிச்சம்பட்டு தலித் மக்களை கூனிச்சம்பட்டு திரவுபதி அம்மன் பூதனேஸ்வரர் கோவிலுக்குள் அழைத்து செல்ல வேண்டும்.

  இப்பிரச்சினை தொடர்பாக புதுவை அரசு உடனடியாக நீதி விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
  Next Story
  ×