என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கொட்டாரம், பறக்கையில் கல்லூரி மாணவி - இளம்பெண் மாயம்
கன்னியாகுமரி:
கொட்டாரம் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அரிராம் (வயது 23). டெம்போ டிரைவர்.
இவர் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொன்லெட்சுமி (19) என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பொன்லெட்சுமி 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
வீட்டில் இருந்த பொன்லெட்சுமி நேற்று திடீரென மாயமானார். இதையடுத்து அரிராம் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் பொன்லெட்சுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இதையடுத்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பொன்லெட்சுமியை தேடி வருகிறார்கள்.
பறக்கை காக்குமூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மகள் சங்கீதா (17). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சங்கீதா மாலை வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் சங்கீதாவை உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.