search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் போராட்டம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். #youngstersprotest #CauveryManagementBoard #BesantNagar #CauveryIssue
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் போராட்டம்  நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக 6 வாரம் கெடு விதித்திருந்தது. எனவே, நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்த மத்திய அரசு கடைசி நேரத்தில் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கேட்க முடிவு செய்தது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 3-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தவுள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை ஏராளமான இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். சுமார் பத்து பேருடன் மட்டும் தொடங்கிய இந்த போராட்டம் நேரம் செல்லச்செல்ல ஊடகங்களின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. போராட்டத்தில் குதித்த மாணவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் இணைந்தனர்.

    மெரினா கடற்கரை மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை மாலை 5 மணியளவில் போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி, பின்னர் விடுவித்தனர். இதையடுத்து போராட்டம் பரவாமல் தடுப்பதற்காக மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #tamilnews #youngstersprotest #CauveryManagementBoard #BesantNagar #CauveryIssue
    Next Story
    ×