என் மலர்

  செய்திகள்

  கும்பகோணத்தில் தேர்வுக்கு பயந்து பிளஸ்-2 மாணவி மாயம்
  X

  கும்பகோணத்தில் தேர்வுக்கு பயந்து பிளஸ்-2 மாணவி மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கும்பகோணம் பள்ளி மாணவி மாயமாகி விட்டது தெரியவந்துள்ளது.

  கும்பகோணம்:

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாதுளம் பேட்டையை சேர்ந்த மணிவண்ணன்- ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் தீபா (வயது 17). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

  இவர் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்க இருப்பதையொட்டி தன்னால் சிறப்பாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியுமா? என்று கலக்கம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் தேர்வு தொடங்கும் முன்பு கடந்த 28-ந்தேதி திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் தனது மகள் மாயமானது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  தேர்வுக்கு பயந்து பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×