என் மலர்

  செய்திகள்

  நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
  X

  நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  நெல்லை:

  நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை அடுத்த சங்கு முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் காளிசுப்பிரமணியன். இவரது மகள் பரணிகா (வயது 2). கடந்த 2 நாட்களாக பரணிகாவுக்கு திடீர் என்று காய்ச்சல் அதிகரித்துள்ளது. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமி பரணிகாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

  ஆனாலும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் பரணிகாவை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி பரணிகா உயிரிழந்தார். இதுகுறித்து பாளை ஐகிரவுண்டு டாக்டர்கள் மானூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதுகுறித்து சுகாதாரதுறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமிக்கு எத்தகைய காய்ச்சல் ஏற்பட்டது. அந்தப்பகுதியில் வேறு யாருக்கும் காய்ச்சல் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
  Next Story
  ×