search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவியுடன் வி‌ஷம் குடித்த கட்டிட தொழிலாளி
    X

    பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவியுடன் வி‌ஷம் குடித்த கட்டிட தொழிலாளி

    பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி, கட்டிட தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நெல்லை:

    பாளை இலந்தகுளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது23). கட்டிட வேலை செய்து வந்த இவரது வீட்டுக்கு அருகே அவரது மாமா வீடு உள்ளது. இந்நிலையில் பிளஸ்-1 படித்து வரும் மாமன் மகளை கண்ணன் காதலித்து வந்தார். அவரும் கண்ணனை விரும்பியுள்ளார்.

    16 வயதே நிறைவடைந்த அந்த பெண் பாளை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததால் அவர்களது காதலுக்கு மாணவி வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கண்ணன் படிக்காமல் கட்டிட வேலை பார்ப்பதால் அவருக்கு பெண் கொடுக்க அவரது மாமா மறுத்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கண்ணனும், மாணவியும் திடீரென மாயமாகி விட்டனர். மாணவியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து விசாரித்த பாளை அனைத்து மகளிர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி காதல் ஜோடியை பிடித்து வந்தனர்.

    மாணவிக்கு 16 வயதே ஆனதால், கண்ணன் மீது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    அதன் பின்னர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவி பெற்றோருடன் வசிக்க சம்மதம் தெரிவித்து தாய் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட கண்ணனும் ஜாமீனில் விடுதலையாகி வீட்டுக்கு வந்தார். ஒரு மாதம் பிரிந்து இருந்த காதல் ஜோடிக்கு மீண்டும் ஒன்று சேர மனம் துடித்தது.

    இதனால் கடந்த மாதம் 2-ந்தேதி மீண்டும் கண்ணன், தனது 16 வயது காதலியை கடத்தி சென்றார். அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மாணவியின் தாயார் சாந்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    அதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க பெருமாள்புரம் போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பெருமாள் புரம் போலீசார் கண்ணனின் உறவினர்களை தொடர்பு கொண்டு காதல் ஜோடியை போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகும் படி உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாணவியான தனது காதலியுடன் கண்ணன் நேற்று இரவு பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது தங்களை மீண்டும் போலீசார் பிரித்து விடுவார்கள் என்று பயந்து 2 பேரும் வி‌ஷம் குடித்து போலீஸ் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொள்வது என்று வி‌ஷ பொடியையும் கொண்டு வந்துள்ளனர்.

    பெருமாள்புரம் போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து காதல் ஜோடியினர் இருவரும் வி‌ஷ பொடியை தின்றனர். ‘நாங்கள் தற்கொலை செய்ய வி‌ஷப்பொடியை சாப்பிட்டு விட்டதாக கூறி அவர்கள் போலீஸ் நிலையத்துக்குள் சென்றனர். இதனால் போலீசார் அவர்கள் 2 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Tamilnews
    Next Story
    ×