search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்
    X

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ரத்தினவேல் பாண்டியன் இன்று காலமானார். அவருக்கு வயது 89. #JusticeRatnavelPandian #RatnavelPandian #Chennai
    சென்னை:

    திருநெல்வவேலி மாவட்டம் திருப்புடை மருதூரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். 1929ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், கடின உழைப்பால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார். நெல்லையில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ரத்தினவேல் பாண்டியன், பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றி நீதிபதியாக உயர்ந்தார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர் பல்வேறு வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.

    ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 89. அவரது மகன் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

    நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், தனது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘எனது வாழ்க்கை பயணம் ஏ டூ இசட்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி கடந்த ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×