என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கோவையில் முன்னாள் கவுன்சிலர்- சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் நகை பறிப்பு
கோவை:
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 44). 75-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவர் நாள்தோறும் நஞ்சுண்டாபுரம்- ராமநாதபுரம் வழியே நடைபயிற்சி செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று அதிகாலை நஞ்சுண்டாபுரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் திடீரென சந்திரசேகரன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார்.
அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டு கொள்ளையனை மடக்கிப்பிடிக்க பின் தொடர்ந்தார். அக்கம் பக்கத்தினரும் உதவிக்கு வந்தனர். எனினும் கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி. இவரது மகள் ஷில்பா ஸ்ரீ (24). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கோவை வந்த அவர் கோவை மணீஸ் ஸ்கூல் பஸ் நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு பஸ்சில் சென்றார். ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை காணவில்லை.
கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர் பஸ்சில் நகையை பறித்தது தெரியவந்தது. இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews