search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியர் மோட்டார்சைக்கிள் திருட்டு
    X

    திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியர் மோட்டார்சைக்கிள் திருட்டு

    திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திரா நகர் மஸ்தான் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 57). இவர் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக செல்வகுமார் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி செந்தில் வடிவு இருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போய் விட்டது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருத்தலையூர் வடக்கு தெருவை சேர்ந்த முன்னாள் டாஸ்மாக் சூப்பர்வைசர் பாலகிருஷ்ணன் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மினி லாரி நள்ளிரவில் தீயில் எரிந்து நாசம் ஆனது. இது விபத்தா? அல்லது மர்ம நபர்கள் கைவரிசையா? என ஜம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×