என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் டீக்கடைக்காரர் கொலை வழக்கில் 2 பேர் கைது
Byமாலை மலர்6 Feb 2018 11:09 AM GMT
திருவெண்ணைநல்லூர் டீக்கடைக்காரர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் தனது மகன் சத்தியமூர்த்தியுடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 3-ந் தேதி நள்ளிரவு டீக்கடை அருகே உள்ள சாலையில் தலையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் செல்வராஜ் இறந்து கிடந்தார்.
இது குறித்து சத்தியமூர்த்தி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது தந்தைக்கும், டீக்கடை அருகே ஓட்டல் நடத்தி வரும் மணிகண்டன் மனைவி லட்சுமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. ஆகவே தனது தந்தையின் சாவு தொடர்பாக லட்சுமி மற்றும் அவருடைய கடையில் பணிபுரியும் மனோகரன், லட்சுமியின் நண்பர் முருகன் (45) உள்பட 4 பேர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.
அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் முருகனும், மனோகரனும் சேர்ந்து செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து செல்வராஜ் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.
அரசூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று நின்று கொண்டிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் முருகன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
மணிகண்டனின் மனைவி லட்சுமி வைத்துள்ள ஓட்டல் அருகே சத்தியமூர்த்தியும் அவரது தந்தை செல்வராஜும் டீக்கடை நடத்தி வந்தனர். இதனால் லட்சுமியின் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை அங்கு செல்ல விடாமல் சத்தியமூர்த்தி தங்களது கடைக்கு அழைத்து சென்றார். இதில் இருவருக்கும் இடையே தொழில்போட்டி ஏற்பட்டது.
மேலும் இடப்பிரச்சனை காரணமாகவும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் சத்திய மூர்த்தி அடிக்கடி லட்சுமியுடன் தகராறு செய்து வந்தார். எனவே நானும், ஓட்டல் ஊழியர் மனோகரனும் (35) சேர்ந்து, சத்திய மூர்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.
சம்பவத்தன்று இரவு டீக்கடை அருகே சென்றோம். அங்கு தூங்கிக் கொண்டிருந்தது சத்தியமூர்த்தி என நினைத்து உருட்டுக்கட்டையால் அவரை அடித்து கொலை செய்தோம். கட்டிலில் ரத்தம் சிதறியது. பின்னர்தான் இறந்தது செல்வராஜ் என்பதை அறிந்தோம். பின்னர் அவர் விபத்தில் இறந்ததுபோல் தெரிவதற்காக, செல்வராஜியின் உடலை கடை எதிரே உள்ள சாலையில் வீசி விட்டு சென்று விட்டோம். ஆனால் நாங்கள் அடித்ததில் கட்டிலில் சிதறி கிடந்த ரத்தத்தை வைத்து செல்வராஜை கொலை செய்ததை போலீசார் கண்டு பிடித்து எங்களை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் தலை மறைவாகி உள்ள மனோகரன் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசூர் பாரதிநகர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews

Next Story
×