search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே தாய்-மகன் மாயம்
    X

    ராமநாதபுரம் அருகே தாய்-மகன் மாயம்

    ராமநாதபுரத்தில் ரூ. 2 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகளுடன் தாய்-மகன் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், அழகன்குளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது ராசிக் (வயது 57). இவரது மனைவி ஜகுபர் நிஷா (41). இவர்களுக்கு முகமது ஹசன் (16) என்ற மகன் உள்ளான்.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது ராசிக் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பிறகு அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் முகமது ராசிக் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது மனைவி ஜகுபர் நிஷா அங்கு இல்லை. பல இடங்களில் தேடியும் அவரையும், மகன் முகமது ஹசனையும் காணவில்லை.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் கொடுத்தார். அதில், வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகளுடன் மனைவி மற்றும் மகன் மாயமாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தேவிபட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி வழக்குப்பதிவு செய்து மாயமான ஜகுபர் நிஷா மற்றும் முகமது ஹசனை தேடி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 படிக்கும் முகமது ஹசன் மாற்றுச்சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×