என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
50 சதவீதம் என்ஜினீயரிங் மாணவர்கள் கணிதம்-இயற்பியலில் தோல்வி
சென்னை:
தமிழகத்தில் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.
எல்லோரும் என்ஜினீயரிங் கனவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேருகிறார்கள். மாணவர்களின் ஆர்வத்தை பார்த்து ஏராளமான தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் வந்து விட்டன.
என்ஜினீயரிங் படிப்புக்கு சேருபவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பிளஸ்-2வில் மதிப்பெண் அதிகமாக பெற்றிருந்தாலும் கிராமப்புறங்களிலும், அரசு பள்ளிகளிலும் இருந்து வரும் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும்போது ஆங்கில வழி கற்றலால் தடுமாறுவதாக கூறப்படுகிறது. இதே நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த தடுமாற்றம் எப்போது தீரும்?
இந்த ஆண்டின் முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் மாணவ- மாணவிகள் கணிதம், இயற்பியல், வேதியியலில் தோல்வி அடைந்துள்ளார்கள். 32 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
கணித தேர்வு எழுதிய 1 லட்சத்து 12 ஆயிரத்து 869 பேரில் 49 ஆயிரத்து 288 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இயற்பியல் தேர்வு எழுதிய 1 லட்சத்து 12 ஆயிரத்து 957 பேரில் 59 ஆயிரத்து 606 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
வேதியியல் தேர்வை 1 லட்சத்து 12 ஆயிரத்து 869 பேர் எழுதினார்கள். அவர்களில் 66 ஆயிரத்து 684 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.
முதல் பருவ பாடத் திட்டத்தில் முன்பு இருந்த சி, சிபிளஸ், பி பிளஸ், பாடங்களுக்கு பதிலாக ‘பைத்தான் புரோகிராம்‘ என்ற பாடம் சேர்க்கப்பட்டிருந்தது. முதல் முறையாக இந்த பாடத்தில் தேர்வு எழுதிய 1 லட்சத்து 12 ஆயிரத்து 957 பேரில் 69 ஆயிரத்து 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
தேர்வில் தோல்வி ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து வருகிறது.
2013-ம் ஆண்டு கலந்தாய்வு மூலம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 838 பேர் சேர்ந்தனர். பின்னர் ஆண்டு தோறும் படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் 83 ஆயிரத்து 600 பேர் மட்டுமே சேர்ந்துள்ளார்கள்.
இதையடுத்து 13 என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தி கல்லூரியை மூட முடிவு செய்துள்ளன.
அதே போல் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்த பாடப் பிரிவுகளை கைவிடவும், மாணவர் சேர்க்கையை பாதியாக குறைக்கவும் 163 கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்