என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணம்: வாக்குமூலம் தாக்கல் செய்ய சசிகலாவுக்கு விதித்த கெடு நாளை முடிவடைகிறது
Byமாலை மலர்6 Feb 2018 4:39 AM GMT (Updated: 6 Feb 2018 4:39 AM GMT)
ஜெயலலிதா மரணம் குறித்து தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு ஆணையம் விதித்த கெடு நாளை முடிவடைகிறது.
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், கடந்த மாதம் 21-ந் தேதி சசிகலாவுக்கு ஒரு சம்மன் அனுப்பியது.
அதில், தங்களுக்கு (சசிகலாவுக்கு) எதிராக பலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்து இருப்பதால் அதற்கு நேரிலோ, வக்கீல் மூலமோ ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்த பின்பு தனக்கு எதிராக புகார் மற்றும் சாட்சியம் அளித்த அனைவரின் விவரங்களையும், ஆவணங்களையும் அளித்து சம்பந்தப்பட்ட நபர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதன்பின்பு தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கும்படியும் சசிகலா தனது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் மூலம் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையம், சசிகலாவின் கோரிக்கையை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக இதுவரை சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு வசதியாக சாட்சியங்களை பெற்றுக்கொள்ளவும், இனிவரும் காலங்களில் சாட்சியம் அளிப்பவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணை செய்து கொள்ளவும் அனுமதி அளித்தது. மேலும், இந்த உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த 30-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு நகல் மற்றும் சாட்சியங்களின் நகல் ஆகியவற்றை ஆணையம் உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு அனுப்பி வைத்தது. இவற்றை சசிகலா 1-ந் தேதி பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோன்று சசிகலாவின் வக்கீலுக்கும் சாட்சியங்களின் நகல் மற்றும் ஆணையத்தின் உத்தரவு நகல் அளிக்கப்பட்டது.
ஆணையத்தின் இந்த உத்தரவு நகலை சசிகலா 1-ந் தேதி பெற்றுக்கொண்டுள்ளதால் அவர் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணையம் விதித்த கெடு நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. எனவே, சசிகலா நாளை தனது வாக்குமூலத்தை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு குறுக்கு விசாரணை முடிந்த பின்பு வாக்குமூலத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை ஏற்கப்படாததால் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? என்பது குறித்து சசிகலா தனது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியனை பெங்களூருக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தற்போதைக்கு, இதுவரை சாட்சியம் அளித்தவர்கள் சசிகலாவுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வாக்குமூலம் தாக்கல் செய்த பின்பு இறுதி விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்த பின்பு தனியாக மற்றொரு வாக்குமூலம் தாக்கல் செய்யலாமா? என்பது குறித்தும் சசிகலாவின் வக்கீல் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. #tamilnews

Next Story
×