search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறகோரி விவசாயிகள் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்
    X

    ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறகோரி விவசாயிகள் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்

    ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி நன்னிலத்தில் 29-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவேரி டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாகியும கர்நாடகத்திடம் தண்ணீர் பெற்று தர மறுத்ததின் விளைவாகவே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ளது.

    மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசிடம் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்று தரவலியுறுத்துங்கள் என தெரிவித்தால் கடிதம் எழுதியுள்ளோம் என தட்டி கழிக்கின்றார்கள். கருகும் பயிரை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் விரைந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெற்று தர வேண்டும்.

    ஓ.என்.ஜி.சி. காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்துகின்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நன்னிலத்தில் 30 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி பெற்று இருக்கிறார்கள். ஒட்டுமொத்த டெல்டாவை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்து விவசாயிகள் ஒரு கோடிக்கும் அதிகமாக விவசாய குடும்பங்கள் அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். ஓ.என்.ஜி.சி.யே வெளியேறு என்ற கோரிக்கையை முன் நிறுத்தி நன்னிலத்தில் வருகிற 29-ந்தேதி உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், லாப்டி இயக்க தலைவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி ஓ.என்.ஜி .சி. அமைக்க இருக்கும் 30 எண்ணெய் கிணறு திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். 

    காவேரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருக்கின்ற தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்வதற்கு பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்நாடகம் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் காவேரி டெல்டா அழிந்து போகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×