search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் பற்றி விமர்சனம்: கமல்ஹாசன் மீது உடுலை போலீசில் புகார்
    X

    ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் பற்றி விமர்சனம்: கமல்ஹாசன் மீது உடுலை போலீசில் புகார்

    ஆர்.கே.நகர் மக்களை விமர்சனம் செய்ததாக நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.

    ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று ஆர்.கே. நகரில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு தரப்பும் விலை நிர்ணயித்தனர்.

    இருபதாயிரம் ரூபாய் அமவுண்டுக்கான டோக்கனாக இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா? என்ற பார் புகழும் பாராட்டும் குறிப்பிடத்தக்கது எனவும் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் கமல்ஹாசன் ஆர்.கே. நகர் தொகுதி மக்களை விமர்சனம் செய்தது குறித்து கோவை ஜே.எம். எண்-2 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்.

    தமிழக வாக்காளர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழர் பண்பாட்டு பேரவை கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்டம் உடுமலை போலீஸ் நிலையத்தில் தமிழர் பண்பாட்டு பேரவையினர் புகார் கொடுத்து உள்ளனர்.

    தமிழகத்தில் பிரபல நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கடந்த மாதம் ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது நிலைப்பாட்டுக்கு எதிரான டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதை கொச்சைப்படுத்தும் விதத்திலும், தமிழக வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் என்ற தொனியிலும் கருத்து பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவானது வாக்களித்த வாக்காளர்களை இழிவுபடுத்துவதுடன் ஒட்டு மொத்த தமிழக மக்களையும் பிச்சைக்காரர்கள் என்ற தொனியில் மனம் புண்படும் படி பேசி உள்ளார்.

    அவரின் பேச்சு தமிழ் சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட கருத்தாகும். எனவே கமல்ஹாசன் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். தமிழர் பண்பாட்டு பேரவை செயலாளர் காதிக் பாட்சா இந்த மனுவை அளித்துள்ளார். #tamilnews

    Next Story
    ×