search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அ.தி.மு.க. வெற்றி பெற கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய வேண்டும்:  அமைச்சர் உதயகுமார்
    X

    அ.தி.மு.க. வெற்றி பெற கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய வேண்டும்: அமைச்சர் உதயகுமார்

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கான ‘திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்’ 2 நாட்களாக நடைபெற்றது.

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 50 பேரவை மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த முகாமை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தொடங்கி வைத்தனர்.

    2-வது நாள் பயிற்சி முகாமை அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

    மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை இந்தியாவிலேயே 3-வது மாபெரும் இயக்கமாக உருவாக்கி காட்டினார்.

    தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்நிறுத்த பாடுபட்டார். அதுமட்டுமல்ல எவராலும் வெல்ல முடியாத மாபெரும் அரசியல் இயக்கமாக அ.தி.மு.க.வை உலக வரலாற்றில் இடம் பெற செய்தார்.

    அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது வழியை பின்பற்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நமது வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும்.

    எதிர்வரும் அனைத்து தேர்தலிலும் வெற்றி வாகை சூடும் வகையில், உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெற அச்சாரமாக உங்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளோம்.

    புரட்சித்தலைவி அம்மாவின் சீரிய திட்டங்கள், வளர்ச்சி பணிகள், தொலை நோக்கு திட்டங்களை, அரசின் சாதனைகளை கிராமம் கிராமமாக பட்டி தொட்டி எங்கும் வீடு வீடாக நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    முடிவில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
    Next Story
    ×