
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி, கொடுங்கையூர், எழில்நகர் பகுதிகளில் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் தலைமையில் யானை சின்னத்துக்கு இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் சத்தியமூர்த்தி, என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட ஐ.டி. ஐ.-யில் சரியான அடிப்படை வசதி, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண்பேன்.
ஐ.ஓ.சி.யில் நவீன பஸ்நிறுத்தம் அமைத்து கொடுப்பேன். பக்கிங்காம் கால்வாயை தூர் வார நடவடிக்கை மேற்கொள்வேன். ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவேன். பணக்காரநகர் பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு திடல், நேரு நகர் பால பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று வாக்காளர்களிடம் உறுதி அளித்து யானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.