என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - தம்பியும் தீயில் கருகி பலி
Byமாலை மலர்4 Dec 2017 8:27 AM IST (Updated: 4 Dec 2017 8:27 AM IST)
ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை கட்டிப்பிடித்த தம்பியும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தான்.
கன்னிவாடி:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குணசேகரன். அவருடைய மனைவி அமுதவள்ளி. இவர்களுக்கு கங்காதேவி (வயது 20) என்ற மகளும், அருண்குமார் (14), யோகேஸ்வரன் (10), பிரகலாதன் (7) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
இதில், கங்காதேவி ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கங்காதேவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் குணசேகரனும், அமுதவள்ளியும் வெளியில் சென்றிருந்தனர். அப்போது கங்காதேவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கங்காதேவி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார்.
தனது அக்காள் மீது தீ பற்றி எரிவதை கண்ட பிரகலாதன் அதிர்ச்சி அடைந்தான். செய்வதறியாது அவன் ஓடி சென்று தனது அக்காளை கட்டிப்பிடித்தான். இதனால் அவன் மீதும் தீ பற்றியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அக்காள்-தம்பி மீது பற்றி எரியும் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அக்காள்- தம்பி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் கருகி அக்காள்-தம்பி இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×