search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ்காரர் மாயழகு மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்: சீமான்
    X

    போலீஸ்காரர் மாயழகு மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்: சீமான்

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்த போலீஸ்காரர் மாயழகு மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்த போலீஸ்காரர் மாயழகு மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மாயழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுத் திருப்பது கண்டனத்திற்குரியது.

    காவலர் மாயழகு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் வாக்குறுதி அளித்த மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றைக்கு அவ்வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு 10 மாதங்களுக்குப் பிறகு துறைரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது ஒரு மோசடிச்செயலாகும்.



    இதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது. ஓராண்டு சம்பள உயர்வு ரத்து என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால், அவருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.

    இவையாவும் ஆளும் ஆட்சியாளர்களின் தூண்டுதல்களால்தான் நடக்கிறது என்றாலும், தமிழகக் காவல்துறையின் நற்பெயருக்கு உண்மையிலேயே களங்கம் விளை விப்பவை என்பதைத் தமிழக காவல்துறை உயரதிகாரிகள் உணர வேண்டும். மாயழகு மீது எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×