என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
சிவகாசியில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் வழிப்பறி 2 பேர் கைது
விருதுநகர்:
சிவகாசி செங்கமல நாச்சியார்புரம் சிவாஜி கணேசன் காலனியைச் சேர்ந்தவர் காளிராஜ் (வயது 19) கூலித்தொழிலாளி. இவர், திருத்தங்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென கத்தியை காட்டி காளிராஜை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 450 மற்றும் கை கடிகாரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த காளிராஜ், பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
அவர்கள், வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருத்தங்கல் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்களது பெயர், திருத்தங்கல் பாறை தெரு மாறன் (28), ஆறாவூரணி முத்துப்பாண்டி (22) என தெரியவந்தது.