search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தொடர் மழையால் கடல் சீற்றம்: மீன் பிடிக்க சென்ற அதிராம்பட்டினம் மீனவர் மாயம் 5 கிராம மீனவர்கள் தேடுகிறார்கள்
    X

    தொடர் மழையால் கடல் சீற்றம்: மீன் பிடிக்க சென்ற அதிராம்பட்டினம் மீனவர் மாயம் 5 கிராம மீனவர்கள் தேடுகிறார்கள்

    தொடர் மழையால் கடல் சீற்றம்: மீன் பிடிக்க சென்ற அதிராம்பட்டினம் மீனவர் மாயம் 5 கிராம மீனவர்கள் தேடுகிறார்கள்

    அதிராம்பட்டினம், நவ.8-

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் சிறிது தொலைவு வரை சென்று மீன் பிடித்து திரும்புகின்றனர்.

    தொடர் மழை மற்றும் வானிலை மாற்றத்தால் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர் கள்ளிமுட்டான் என்கிற முனியாண்டி (வயது 65). நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அவர் கரையிலிருந்து சுமார் 4 பாக தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கடல் பகுதியில் பலத்த சூறைகாற்று வீசியது. இதனால் அவரது நாட்டுப் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் முனியாண்டி தவறி விழுந்தார்.

    மீன்பிடிக்க சென்ற முனியாண்டி வெகு நேரமாகியும் கரைக்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் இது குறித்து கடலோர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் முனியாண்டியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கரையூர் தெரு, காந்தி நகர் ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிபுறக்கரை உள்ளிட்ட 5 மீனவ கிராமத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் மாயமான மீனவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×