என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    X

    பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    கரூர் அருகே புகளூர் காகித ஆலையின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான திறன் வெளிப்பாடு போட்டிகள் 2 நாட்கள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    கரூர் அருகே புகளூர் காகித ஆலையின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான திறன் வெளிப்பாடு போட்டிகள் 2 நாட்கள் நடந்தன. இதில் கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 56 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் 1,123 பேர் பங்கேற்றனர்.

    ஆங்கிலம் மற்றும் தமிழில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி- வினா உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் கரூர் மாவட்ட அளவில் கரூர் டி.என்.பி.எல். பப்ளிக் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும், கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், கரூர் டி.என்.பி.எல். மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தன.

    கரூர் அல்லாத பிற மாவட்ட அளவில் திருச்சி கமலா நிகேதன் பள்ளி முதல் இடத்தை பிடித்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் வழங்கி பேசினார். காகித ஆலை நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குனர் வெள்ளியங்கிரி, செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் ஒரு ரோஜா செடி வழங்கப்பட்டது.
    Next Story
    ×