என் மலர்
செய்திகள்

யாருக்கு இரட்டை இலை கிடைக்கும்?: இளங்கோவன் பரபரப்பு பேட்டி
பிரதமர் மோடி காலில் யார் விழுந்து கிடக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
பழனி:
தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பழனி வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை. இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரையில் பிரதமர் மோடி காலில் யார் விழுந்து கிடக்கின்றனரோ அவர்களுக்கே சின்னம் கிடைக்கும். தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளிக்கு சென்று படித்து வர வேண்டும்.
கொசுக்களை ஒழிப்பது தமிழக அரசின் கடமை என்பது கூட தெரியாமல் எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்ததாக கூறுவதே இதற்கு உதாரணம்.

தமிழக அமைச்சர்கள் தார் ஊழல், இறக்குமதி செய்யப்பட்ட மணலில் கமிஷன் ஆகியவற்றை பார்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது. இவர்கள் அனைவரும் ஒரு நாள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் அப்துல்கனி ராஜா (கிழக்கு), சிவசக்திவேல் கவுண்டர் (மேற்கு) உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Next Story