என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை அருகே ஓய்வுபெற்ற அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வீட்டில் நகை கொள்ளை
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிபட்டி போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராஜராஜன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி மல்லிகா (வயது 60). ஓய்வு பெற்ற அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மல்லிகா தனது தோழியை பார்க்க வெளியூர் சென்றார்.
பின்னர் 30-ந் தேதி மல்லிகா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
பூட்டிய வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் மல்லிகா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.