search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கோவில் பூசாரி பலி
    X

    திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கோவில் பூசாரி பலி

    திருக்கோவிலூர் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கோவில் பூசாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 61). இவர் அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று கோவிலில் பூஜை செய்துவிட்டு சைக்கிளில் தனது வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத வகையில் கண்ணன் மீது மோதியது, இதில் பலத்த ரத்த காயங்களுடன் தூக்கி எறியப்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கணேசன் (வயது 45) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×