என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2015-ம் ஆண்டு ஏற்பட்டது போல வெள்ள பீதியில் சென்னை மக்கள்
Byமாலை மலர்1 Nov 2017 9:36 AM GMT (Updated: 1 Nov 2017 9:36 AM GMT)
சென்னையில் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு ஏற்பட்டது போல வெள்ளம் ஏற்படுமோ என்ற பீதியில் சென்னை மக்கள் உள்ளனர்.
சென்னை:
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தென்சென்னை பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ள பாதிப்பை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.
அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீருடன் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியதால் கரையோரங்கள் வழியாக ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், வடபழனி, சூளைமேடு, அசோக் நகர், தி.நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதேபோல வேளச்சேரி, தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளிலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி வெளுத்து வாங்கிய மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
கடந்த ஆண்டு பருவமழையின்போதும் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற பீதி நிலவியது. ஆனால் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
இந்த ஆண்டு கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த மழையால் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் 2015-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற பாதிப்பு ஒரு நாள் மழையிலேயே ஏற்பட்டு விட்டது.
இதேபோல வேளச்சேரி ராம்நகர் பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள 9, 10-வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தனி வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
சாலை சந்திப்புகளில் ரோடுகள் உயர்த்தி போடப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் மழைநீர் செல்ல முடியாமல் சாலையோரம் தேங்கியுள்ளன. அந்த தண்ணீரே வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் வீடுகளின் கீழ் தளத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சென்னையில் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாகவே மழை மிரட்டி வருகிறது.
கடந்த முறை கடும் பாதிப்பை ஏற்படுத்திய அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மேலும் வலுவடையும்போது மேலும் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுப்பதற்கு வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆற்றங்கரை ஓரங்களில் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவர்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.
கொடுங்கையூர், மாதவரம் பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின்போது கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி, அன்பு நகர் பகுதிகளில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. மழை நீர் வடிகால் மூலமாக தண்ணீர் உடனடியாக வெளியேறி விட்டது.
ஆனால் கடந்த ஆண்டு வெங்கடேஸ்வரா காலனி, அன்புநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் மெயின்ரோடு போடப்பட்டது. அப்போது அந்த சாலை மிகவும் உயரமாக போடப்பட்டு விட்டது. இதனால் அன்புநகர் 1-வது தெருவில் லேசான மழை பெய்தாலே அங்கு தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. இதற்கும் தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
×