என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்த விலையில் விவசாயிகள் நெல் விற்கும் அவலம்: ராமதாஸ்
Byமாலை மலர்1 Nov 2017 6:25 AM GMT (Updated: 1 Nov 2017 6:25 AM GMT)
கொள்முதல் விலையை அறிவிக்காததால் குறைந்த விலையில் விவசாயிகள் நெல் விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி அரசால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றாலும் பாதிப்புகளுக்கு மட்டும் எந்த பஞ்சமும் இல்லை. குறுவை அறுவடைத் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல் கொள்முதல் விலை அறிவிக்கப்படாததால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி பாசன மாவட்டங்களின் முதல் போகமான குறுவை நெல் நடவு ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முடிவடையும். குறுவைப் பருவ நெல்லை அறுவடை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் உழவர்கள் தீப ஒளி திருநாளுக்கு தயாராவர் என்பதால் ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் தொடங்கும்.
அதற்கு முன்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி வாக்கில் நெல் கொள்முதல் விலை அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் முடிந்து நவம்பர் தொடங்கிவிட்ட நிலையில் நெல்லுக்கான கொள்முதல் விலை இன்று வரை அறிவிக்கப்படவில்லை. அதனால் நெல் கொள்முதலும் நடக்கவில்லை.
குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் வங்கிகளிலும், தனிநபர்களிடமும் கடன் வாங்கித்தான் செய்திருப்பார்கள். நெல்லை அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான் கடனை அடைப்பார்கள். ஆனால், கொள்முதல் தொடங்காததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு 1550 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 1590 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று கடந்த ஜூன் 21ஆம் தேதியே மத்திய அரசு அறிவித்துவிட்டது.
அத்துடன் ஊக்கத்தொகை சேர்த்து சாதாரண ரக நெல் ரூ.1550க்கும், சன்னரக நெல் ரூ.1590க்கும் கொள்முதல் செய்யப்படுமென கடந்த ஜூன் 22ஆம் தேதியே தமிழக அரசு அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்த சாதாரண பணியைக் கூட நான்கரை மாதங்களாக செய்யவில்லை என்றால் பினாமி அரசின் செயல் வேகத்தை உணரலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாலும், குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதாலும் அதை சேமித்து வைக்க முடியாது. தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் இன்னும் தொடங்காத நிலையில், விவசாயிகள் தங்களிடம் உள்ள நெல்லை வந்த விலைக்கு தனியாரிடம் விற்று வருகின்றனர். விவசாயிகளின் பலவீனத்தை தெரிந்து கொண்ட தனியார் நெல் வணிகர்கள் அடிமாட்டு விலைக்கு நெல்லை வாங்கிக் குவித்து வருகின்றனர்.
எனவே, நெல் கொள் முதல் விலையை அரசு உடனே அறிவிக்க வேண்டும். வழக்கம் போல குறைந்த தொகையை ஊக்கத் தொகையாக அறிவிக்காமல் நெல்லுக்கான உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Next Story
×