என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டெல்டா மாவட்டங்களில் மழை: கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை கடந்த 4 நாட்களாக தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு காரணமாக முடங்கி போய் உள்ளது.
நேற்றுமுன்தினம் பெய்த ஒரு நாள் மழைக்கே தாங்கு பிடிக்க முடியாமல் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், சேதுபாவாசத்திரம், வல்லம், திருவையாறு ஆகிய இடங்களில் மழை பெய்தது.
தஞ்சையில் நேற்று காலை முதல் இரவு வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. மழையால் இரவில் கடும் குளிர் நிலவியது. மழை காரணமாக நகரில் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வடசதுக்கை பகுதியில் விவசாயி ராஜன் என்பவரின் வீட்டு சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது அவரது குடும்பத்தினர் முன்பகுதியில் தூங்கி கொண்டிருந்ததால் அனைவரும் உயிர் தப்பினர்.
இதேபோல் கும்ப கோணம் அருகே கூகூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (55) என்பவரின் வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள திருநகரி- கோவிலான் வாயக்கால்களில் விடிய விடிய பெய்த மழையால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியையொட்டி உள்ள சுமார் 200 குடியிருப்பு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதேபோல் வேலவன் நகர் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கள்ளர் தெரு, அண்ணா நகர், வள்ளுவர் தெரு, புங்கனூர் சாலை ஆகிய பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இதேபோல் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண் டானாவில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் மழை பெய்தது. மாவட்டத் திலேயே அதிகமாக திருத்துறைப்பூண்டியில் மழை பெய்துள்ளது.
நேற்று பெய்த மழையால் திருவாரூர் உழவர் சந்தைக்குள் தண்ணீர் புகுந்தது. இதைதொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் மழை தண்ணீரை வெளியேற்றினர்.
டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருவதால் அரசின் அனைத்து துறை சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறையினர் ஆற்றின் கரையோர பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். மேலும் தேவையான மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்