search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் டெங்கு கொசு உற்பத்தி: இரும்பு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
    X

    திருவண்ணாமலையில் டெங்கு கொசு உற்பத்தி: இரும்பு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

    டெங்கு கொசு பெருக்கிய திருவண்ணாமலை இரும்பு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கோபால் தெரு, ராம லிங்கனார் தெரு, கல் நகர், சமுத்திரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளில் கலெக்டர் கந்தசாமி இன்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். கோபால் தெருவில் உள்ள பழைய இரும்பு கடையில் ஆய்வு செய்தபோது, டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தர விட்டார். பின்னர், நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சலை தடுப்பது பற்றி நகராட்சி அலுவலர்களுடன் கலெகடர் ஆலோசனை நடத்தினார்.

    Next Story
    ×