search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூத்த குடிமக்களின் அனுபவம் நமக்கு எப்போதும் தேவை: முதியோர் தினவிழாவில் கலெக்டர் வேண்டுகோள்
    X

    மூத்த குடிமக்களின் அனுபவம் நமக்கு எப்போதும் தேவை: முதியோர் தினவிழாவில் கலெக்டர் வேண்டுகோள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கரூர் புன்னம் சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் நடைபெற்ற உலக முதியோர் தினவிழாவில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.
    கரூர்:

    கரூர் புன்னம் சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் நடைபெற்ற உலக முதியோர் தினவிழாவில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் முதியோர்களுக்காக  நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

    மூத்த குடிமக்கள் நம் நாட்டின் சொத்து அவர்களை பேணி பாதுகாப்பது நமது கடமையாகும். மூத்த குடிமக்களின் அனுபவங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமக்கு தேவைப்படுகிறது. பெரியோரை காண்பது நன்று பெரியோர் சொல் கேட்பது நன்று. ஒர் வீட்டில் பெரியோர் இருந்தால் அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளுக் கெல்லாம் தீர்வு கண்டு விடுவார்கள்.

    மேலும், வீட்டில் பெரியோர்கள் இருக்கும்போது இளைஞர்களின் ஒழுக்கம் காக்கப்படுகிறது. நம்மை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களை நன்றி உணர்வோடு பாதுகாக்க வேண்டும். பெற்றோர்கள் இருக்கும்போது மதித்து பாதுகாக்காமல் அவர்கள் இறந்த பின்பு அவர்களின் புகைப்படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்துவதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை.

    முதியோர் இல்லம் அதிகளவு தோன்றுவது நம் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான செயலல்ல. மூத்த குடிமக்கள் பாதுகாக்கவும் தனது பிள்ளைகள் கைவிட்டு விட்டால் நடவடிக்கை எடுக்கவும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளது. தேவைப்படுவோர் அதை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய தயாராக உள்ளது என மாவட்ட  கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்காக நடைபெற்ற பாட்டுபாடுதல், இசை நாற்காலி, வாசனையை நுகர்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
    Next Story
    ×