search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
    X

    உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்

    உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 123 நகரசபைகள், 529 டவுன் பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ம்றைவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

    இதையடுத்து, தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது.

    இதற்கிடையே, தமிழகத்தில் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதுதொடர்பான அறிவிக்கையை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும், நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. ஆர்.எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக தி.மு.க.வினர் கூறுகையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை மேல் முறையீடு செய்யலாம் என்பதால் தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டால் எங்களது கருத்தை கேட்க வேண்டும். மேலும், தங்களது தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×