search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் பெய்யும் சாரல் மழை: பயணிகள் அறைகளில் முடக்கம்
    X

    கொடைக்கானலில் பெய்யும் சாரல் மழை: பயணிகள் அறைகளில் முடக்கம்

    கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள், பயணிகள் அறைகளிலேயே முடங்கி உள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இந்த மழையால் அவர்கள் அறைகளிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது சீசன் முடிந்த பின்பும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மட்டும் தங்கி இருந்தனர்.

    கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

    இரவு முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் கம்பளி மற்றும் போர்வைகளால் தங்களை பாதுகாத்து கொண்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இருந்தபோதும் மழை பெய்ததால் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெய்துள்ள மழையினால் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது தயார் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×