என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிப்பாளையம் மில் ஊழியர் கொலை: 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்19 Aug 2017 12:11 PM GMT (Updated: 19 Aug 2017 12:11 PM GMT)
பள்ளிப்பாளையம் அருகே மில் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி அன்று மில்லில் வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அவரை மர்ம நபர்கள் கொலை செய்து உடலை பள்ளிப்பாளையம் அருகே நெட்ட வேலம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் வீசி விட்டு சென்றனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கவுரிசங்கர் மற்றும் சசிகுமார், சண்முக சுந்தரம் ஆகிய 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலைங்களில் உள்ளன.
இவர்கள் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாலும், மீண்டும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டியும் முன் எச்சரிகை நடவடிக்கை கருத்தில் கொண்டு 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ஆசியா மரியம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்ட 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Next Story
×