என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ரிக் வண்டி டிரைவர் பலி
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 36). ரிக் வண்டி டிரைவர்.
இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
அவர் மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைபள்ளி அருகே சென்றபோது அங்கு பெய்த மழையின் காரணமாக மோட்டார் சைக்கிள் சாலையில் வழுக்கியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு கலைவாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.