என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் குத்தி கொலை: போலீசார் விசாரணை
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடுங்குளம் பகுதி இ.சி.ஆர்.சாலையில் இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக நடை பயிற்சி சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த கிடந்த நபரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை வேறு இடத்தில் கொலை செய்து இங்கு அவரது உடலை வீசிவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் எடையூர் ஊராட்சி குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 41) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.