என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது
Byமாலை மலர்19 Aug 2017 8:12 AM GMT (Updated: 19 Aug 2017 8:12 AM GMT)
அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான முயற்சிகள் ஒருபுறம் நடக்கும் நிலையில் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். இந்த இல்லத்தை 1967-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கினார்.
நடிகையாக இருந்த போதே ஜெயலலிதா இந்த வீட்டில்தான் வசித்தார். அவர் அரசியலுக்கு வந்த பிறகும் போயஸ் கார்டன் வீட்டிலேயே வசித்து வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அ.தி.மு.க.வில் முடிவு எடுக்கும் அதிகார மையமாக போயஸ் கார்டன் இல்லம் திகழ்ந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா தங்கி இருந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகும் போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கியே கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். சசிகலாவுடன் அவரது குடும்பத்தினரும் போயஸ் கார்டன் வீட்டில் தங்கி இருந்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்கு சென்ற பிறகு அவரது குடும்பத்தினர் போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியேறினார்கள். தற்போது ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் போயஸ் கார்டன் இல்லத்தை பராமரித்து வருகிறார்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். சமீபத்தில் தீபா போயஸ் கார்டன் இல்லத்தில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் மோதல் வலுத்து வருகிறது. அதே நேரத்தில் மற்றொருபுறம் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகளை ஒன்றாக இணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்றால், சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லமான ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் ஆக்கப்படும் என்றும் அறிவித்தார்.
போயஸ்கார்டன் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்தார். போயஸ்கார்டன் இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. அதை நினைவு இல்லமாக மாற்ற ஒப்புக்கொள்ள முடியாது என்றார்.
அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில், “மக்களின் கோரிக்கைகளை ஏற்றே போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சட்ட ரீதியாக அந்த இல்லத்துக்கு யார் உரிமையாளர்களோ அவர்களுக்கு இழப்பீடு தந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
இந்த நிலையில் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்கும் பணிகள் இன்று தொடங்கின. இதற்காக மயிலாப்பூர் தாசில்தார் சைலேந்தர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சியை சேர்ந்த 8 பேர் குழுவினர் போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றனர். அங்கு அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 2 நாட்களிலேயே நினைவு இல்லமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான முயற்சிகள் ஒருபுறம் நடக்கும் நிலையில் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தொடங்கி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
×