என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சமையல் கியாஸ் தொழிற்சாலையில் வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேசனுக்கு சொந்தமான சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டால் அதனை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
முதலில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே பணியில் இருந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
தமிழ்நாடு கமாண்டோ போலீஸ் மற்றும் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
மோப்ப நாய் டேனி மோப்பம் பிடித்து அங்கு கியாஸ் சேமிப்பு பகுதி அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பெட்டியை கண்டறிந்தது.
வெடிகுண்டு இருந்த சூட்கேசை கைப்பற்றிய பின்னர் அதற்குரிய நிபுணர்கள் அதனை பாதுகாப்பாக கையாள்வது மற்றும் செயலிழக்க செய்யும் முறையை தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் செய்து காண்பித்தனர்.