search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நாகர். மார்க்கெட்டுகளில் தக்காளி, காலிபிளவர் விலை குறைந்தது
    X

    நாகர். மார்க்கெட்டுகளில் தக்காளி, காலிபிளவர் விலை குறைந்தது

    நாகர்கோவிலில் தக்காளி, காலிபிளளவர் வரத்து அதிகரிப்பால் மார்கெட்டுகளில் விலை குறைந்துள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரியில் பழமை வாய்ந்த கனக மூலம் சந்தையும், ஒழுகினசேரியில் அப்டா மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது.

    இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்தில் இருந்தும் ஒசூர், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக வெளியூர்களில் இருந்து மட்டுமே தக்காளி வந்தது. குமரி மாவட்டத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக வரவில்லை. இதனால் தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்தது.

    கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. தற்போது படிப்படியாக விலை சரிந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக தக்காளிகள் வரத்தொடங்கியதையடுத்து விலை குறைய தொடங்கி உள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.46-க்கு விற்கப்படுகிறது.

    காலிபிளவர் வரத்தும் அதிகமாக காணப்படுகிறது. ஒசூரில் இருந்து அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதால் மார்க்கெட்டுகளில் காலிபிளவர் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் காலிபிளவர் விலையும் குறைந்தது. ஒரு கிலோ காலிபிளவர் ரூ.20-க்கு விற்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக வாழைக்காய் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரக்கூடிய வாழைத்தார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    மேலும் வாழைத்தார்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ரூ.600-க்கு விற்கப்பட்ட செவ்வாழை குலை ரூ.1000-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட கதளி ரூ.400-க்கும், ரூ.500-க்கு விற்கப்பட்ட ஏத்தங்குலை ரூ.900- வரையிலும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.12 வரை விற்பனையானது.

    மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி-ரூ.46, மிளகாய்- ரூ.100, உருளைக் கிழங்கு-ரூ.24, பல்லாரி-ரூ.28, காரட்-ரூ.56, பீன்ஸ்-ரூ.70, சின்ன வெங்காயம்-ரூ.86, காலிபிளவர்-ரூ.20, தடியங்காய்-ரூ.36, வெள்ளரிக்காய்- ரூ.30, சேனை-ரூ.50, புடலங்காய்-ரூ.40, கத்திரிக்காய்- ரூ.50, வழுதலங்காய்-ரூ.60, முட்டைக்கோஸ்-ரூ.20, முருங்கைகாய்-ரூ.56.
    Next Story
    ×