என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவையாறு அருகே சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்2 Aug 2017 2:56 PM IST (Updated: 2 Aug 2017 2:56 PM IST)
திருவையாறு அருகே சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே பள்ளியக்ரஹாரம் மணல்மேடு மேலத்தெருவில் வசிப்பவர் உத்திராபதி மகன் கிரி (27). இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் திருமானூரிலிருந்து சென்றபோது லாரி மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்.
திருவையாறு அருகே திருப்பழனம் மெயின்ரோடில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன் (62). இவர் சம்பவத்தன்று மாலை சைக்கிளில் வரும்போது மினிவேன் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு தஞ்சாவூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். திருவையாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×