search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    முதல்-அமைச்சருக்கு தெர்மாகோல் பார்சல் அனுப்ப முயன்ற மாணவர்கள் கைது
    X

    முதல்-அமைச்சருக்கு தெர்மாகோல் பார்சல் அனுப்ப முயன்ற மாணவர்கள் கைது

    தஞ்சையில் முதல்வருக்கு தெர்மாகோல் அனுப்ப முயன்ற 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் (30), கந்தர்வகோட்டை பாண்டியன், விழுப்புரம் குபேந்திரன் உள்ளிட்ட சில மாணவர்கள் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்திற்கு சென்றனர். அங்கு தமிழக முதல்வருக்கு அஞ்சல் மூலம் தெர்மாகோல் பார்சல் அனுப்ப முயன்றனர்.

    போராட முயலும் மாணவர்கள் மீதான அடக்கு முறைகளை அரசு கைவிட வேண்டும். மக்கள் பணத்தில் தெர்மாகோல் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அதற்கு துணைபோன ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலை மறைக்க தமிழக அரசு முயல்கிறது. எனவே ஊழலை மறைக்க தெர்மாகோல் பார்சல் செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்ப வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் பார்சல் அனுப்ப முயன்ற பாரிமைந்தன், பாண்டியன், குபேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×