search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உந்துசக்தி குறைந்ததால் மலை ரெயில் 2 மணி நேரம் தாமதம்
    X

    உந்துசக்தி குறைந்ததால் மலை ரெயில் 2 மணி நேரம் தாமதம்

    உந்துசக்தி குறைந்ததால் மலை ரெயில் 2 மணி நேரம் தாமதமாக குன்னுரை வந்தடைந்தது. மலை ரெயில் நின்று நின்று வந்ததால் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயற்கை அழகை ரசித்தபடி மலைரெயிலில் ஊட்டிக்கு வர விரும்புகின்றனர். இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும் 4 பெட்டிகளுடன் பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

    இந்த மலை ரெயில் தினசரி காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்படுகிறது. நேற்று சுமார் 175 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் குன்னூர் நோக்கி புறப்பட்டது. கல்லார் ரெயில் நிலையத்தை அடுத்து தொடங்கும் பல்சக்கர தண்டவாளம் கொண்ட மலைப்பாதையில் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதில், ஆடர்லி முதல் ரண்ணிமேடு ரயில் நிலையங்கள் வரை மலைரெயில் என்ஜினில் நீராவியின் உந்து சக்தி குறைந்தது. இதனால் 5–க்கும் அதிகமான இடங்களில் மலைரெயில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சிலர் ரெயிலை விட்டு இறங்கி காத்திருந்தனர். மலை ரெயில் நின்று நின்று வந்ததால் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

    நீராவி ஏற்றிய பின்னர் மலைரெயில் புறப்பட்டு வந்தது, இதனால் வழக்கமாக காலை 10.15 மணிக்கு குன்னூரை வந்தடைய வேண்டிய மலை ரெயில் 2 மணி நேரம் தாமதமாக 12.15 மணிக்கு வந்தடைந்தது. இதையடுத்து 12.30 மணிக்கு 5 பெட்டிகளுடன் டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

    மலை ரெயிலில், நிலக்கரி நீராவி என்ஜினை புதிய தொழில்நுட்ப முறையில் பர்னஸ் ஆயில் என்ஜினாக மாற்றி உள்ளனர். அதை சரிவர பராமரிக்காததால் உந்துசக்தி குறைந்து கல்லார்– குன்னூர் இடையே மலை ரெயில் அடிக்கடி நின்று விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தண்ணீர், உணவு கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது.

    எனவே மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை தாமதமின்றி மலை ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×