என் மலர்

  செய்திகள்

  மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்
  X

  மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொம்மிடியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர், பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  பொம்மிடி:

  தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் தனியார் நூற்பாலை ஆகிய பகுதிகளில் 2 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த மாதம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இந்த 2 மதுக்கடைகளும் மூடப்பட்டன.

  இந்த நிலையில் நேற்று தனியார் நூற்பாலை பகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் இமயவர்மன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி கட்சி நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, அரசாங்கம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணன், பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பா.ம.க.வினர் மற்றும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொம்மிடி பகுதியில் உள்ள 2 மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர். அதற்கு வேறு இடத்தில் கடைக்கு இடம் தேர்வு செய்யும் வரை மதுக்கடைகளை திறக்க அனுமதிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் பெண்கள் 2 மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் மதுக்கடையை திறக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
  Next Story
  ×